ஆபாச வீடியோ சர்ச்சை: பாஜக கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

ஆபாச வீடியோ சர்ச்சை: பாஜக கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்!

ஆபாச வீடியோ சர்ச்சை: பாஜக கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்!

தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன். இந்த நிலையில், கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஆபாச வீடியோ ஒன்று இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.

நான் 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன். என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.மேலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை செய்ததாக தெரிவித்துள்ள கே.டி.ராகவன், “நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad