கொடநாடு கொலை: எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்ட ஓபிஎஸ்... யூ டர்ன் அடிக்கும் வழக்கு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

கொடநாடு கொலை: எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்ட ஓபிஎஸ்... யூ டர்ன் அடிக்கும் வழக்கு

கொடநாடு கொலை: எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்ட ஓபிஎஸ்... யூ டர்ன் அடிக்கும் வழக்கு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபட்டதற்கும், அதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மூன்றாவது மனிதரை போல காட்டிக்கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. ஜெ மறைவிற்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டு பின்னர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் எதிர்க்கட்சி தலைவராகவே மாறினார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமியை அவர் விமர்சித்ததெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், ஏப்ரல் 2017 23ம் தேதி ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாக காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன் '' தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், இக்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்'' என்று அறிக்கை வெளியிட்டார்.

மேலும், ''நள்ளிரவில் பல வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஜெயலலிதா பங்களா என்று தெரிந்தே, அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களைத் தடுத்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, பல சூட்கேஸ்களில் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

மக்களால் இன்றும் போற்றிப் புகழகப்படும் ஒரு சக்திவாய்ந்த முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பங்களாவிலேயே, மிகவும் துணிச்சலாக நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது'' என்றும் கூறினார். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது சூடி பிடிக்க தொடங்கிவிட்டது. அதுமட்டுமில்லாமல், கொடநாடு கொலை, கொள்ளைக்கு பின்புலம் ஈபிஎஸ் தான் என்று வழக்கில் முக்கிய குற்றவாளியே கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொய் வழக்கு போடும் திமுக என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் கருப்பு பேட்ஜ் அணியாமல் இருந்தது பல்வேறு கேள்விகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



முன்னதாக 2017 இல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விபத்தில் சிக்கியது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசும் வலியுறுத்தியதை நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad