கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு: சென்னை, கோவையில் சரிவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு: சென்னை, கோவையில் சரிவு..!

கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு: சென்னை, கோவையில் சரிவு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,95,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 19,864 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 193 பேருக்கு
கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 542010
ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 531563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8373 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 233641 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 229106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2232
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 164169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 160625 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2421 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,542 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,95,42,919 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,892 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,41,432 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,639ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad