தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்வு!

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்வு!

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை தலைமை செயலகம் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, '' தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில்
மாநில சட்டப் பேரவை முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் இரண்டு
காலியிடங்களுக்கான தேர்தல் கால அட்டவணை 11.08.2021 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.

2. தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ப.அப்துல் சமது மற்றும் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

3. தேர்தலில் மேற்கண்ட பிரிவில், இரண்டு காலியிடங்களுக்கு இரண்டு பேர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல்) விதிகள், 1997, விதி 9(6)–ன் படி
இவர்கள் இரண்டு பேரும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad