ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன பயணிகள் - வீடியோ உள்ளே! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன பயணிகள் - வீடியோ உள்ளே!

ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன பயணிகள் - வீடியோ உள்ளே!

உத்தரகண்ட் மாநிலத்தில், 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து, கார் ஆகியவை மண்ணோடு புதைந்தன. இதில் இருந்து 28-க்கும் அதிகமானோர் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் 14 பேருடன் சென்ற பேருந்து நூலிழையில், நிலச்சரிவில் இருந்து தப்பி இருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில், மலைப்பகுதியில் பேருந்து ஒன்று 14 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று சென்றது. திடீரென மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மரம், செடி, கொடிகளுடன் மணல் சாலையில் கொட்டியது.

இதைக் கண்ட பேருந்து ஓட்டுனர் நிலச்சரிவைக் கணித்து பேருந்தை முன்பே நிறுத்தி விட்டார். இதை அடுத்து பயணிகளில் சிலர் ஜன்னல் வழியே குதித்தும், சிலர் வாசல் வழியாகவும் தப்பியோடினர். இதன் பின்பு பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றது.

No comments:

Post a Comment

Post Top Ad