மக்கள் ஆசிர்வாத யாத்திரை: முட்டிக் கொள்ளும் பாஜக, சிவசேனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

மக்கள் ஆசிர்வாத யாத்திரை: முட்டிக் கொள்ளும் பாஜக, சிவசேனா!

மக்கள் ஆசிர்வாத யாத்திரை: முட்டிக் கொள்ளும் பாஜக, சிவசேனா!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, புதிதாக 39 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் ‘மக்கள் ஆசிர்வாத யாத்திரை’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளான பாஜகவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத், அனைவருக்குமே தெரியும்.
பாஜகவின் மக்கள் ஆசிர்வாத யாத்திரையால் ஒரு பலனும் இல்லை. தங்களின் வலிமையை காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு, கொரோனா மூன்றாம் அலையை அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக மாநில அரசுக்கு தான் பெரும் தலைவலியாய் வந்து சேரும் என்று குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிர மாநில அமைச்சரவை கூட்டத்திலும் ஆசிர்வாத யாத்திரை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா தாக்கு

குறிப்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ஒருவர் கொரோனாவிற்கு எதிரான போராளியாக இல்லாமல் கூட போகலாம். ஆனால் கொரோனா பரவுவதற்கு ஏதுவான ஸ்பெரெட்டராக இருக்கக் கூடாது என்று பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் சாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,

பாஜக பதிலடி

இத்தகைய விமர்சனங்களுக்காக அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் செயல்பாடுகளை எங்களால் நிறுத்திக் கொள்ள முடியாது. எங்களுக்கு அறிவுரைகள் சொல்லும் தலைவர்களை கவனித்தீர்களா? முகக்கவசம் அணியாமலும், ஒருவருக்கொருவர் போதிய சரீர இடைவெளி விடாமலும் நடந்து கொள்கின்றனர் என்று விமர்சனம் செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad