மலேசியாவின் அடுத்த பிரதமர் இவர்தானா?
மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் துணைப் பிரதமர் மொஹிதின் யாசின் ஆகியோர் பக்கத்தான் ஹராப்பான் என்ற கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பை சேர்ந்த இவர்கள் மூவரும் வெவ்வேறு காலகட்டத்தில்
அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள்.
அந்த தேர்தலில் அப்போதைய பிரதமரும், ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பின் தலைவருமான நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலில் பிரசாரம் செய்து வெற்றி கண்டனர். இதையடுத்து, அமைந்த அரசின் பிரதமராக துன் மகாதீர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த புதிய ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, அன்வார் இப்ராகிம் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. திடீரென தான் பதவி விலகுவதாக துன் மகாதீர்
அறிவித்தார்.
தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் காரணமாக, மொஹிதின் யாசின் புதிய பிரதமராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றார். எந்த கட்சியை வீழ்த்து இந்த மூவர் கூட்டணி ஆட்சி அமைத்ததோ அதே, ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு இவருக்கு ஆதரவளித்தது. ஆனால், அன்று முதலே அவருக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
No comments:
Post a Comment