காங்கிரஸ் கட்சியில் சூர்யா? துண்டு போட போனாரா சிவக்குமார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

காங்கிரஸ் கட்சியில் சூர்யா? துண்டு போட போனாரா சிவக்குமார்?

காங்கிரஸ் கட்சியில் சூர்யா? துண்டு போட போனாரா சிவக்குமார்?

சினிமாவில் ஒரு நடிகர் ஓரிரு ஹிட் படங்களை கொடுத்துவிட்டால் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி வெகு இயல்பாக வைக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். இந்நிலையில் அரசியல் ரீதியான கருத்துகளை துணிச்சலுடன் பதிவு செய்துவரும் சூர்யாவை நோக்கி அந்த கேள்வி எழாதா என்ன? அதுவும் சூர்யாவுடைய கடந்த சில ஆண்டுகளின் நடவடிக்கைகள் பாஜக எதிர்ப்பு என்பதில் தீவிரமாக இருக்கும் போது அவரை சுற்றி மேலும் சில கேள்விகள் வட்டமிடுகின்றன.
பாஜக எதிர்ப்பு என்றால் சூர்யா காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்ற கேள்வி ஏற்கெனவே எழுந்தது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றது.
காங்கிரஸ் பிரமுகர் விருகை பட்டாபி ஏற்பாட்டில் நிறுவப்பட்ட காந்திஜியின் கைராட்டை பிரம்மாண்டமாக சென்னை சத்தியமூர்த்திபவனில் நிறுவப்பட்டது. 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று அதை திறந்து வைத்தார். இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நிகழ்வில் சிவக்குமார் கலந்துகொண்டது அரசியல் அரங்கில் விவாதத்தை கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் அழகிரி, பொதுச் செயலாளர் கோபண்ணா ஆகியோருடன் சிவக்குமார் நெருங்கிய நட்பு பாராட்டுவார். அந்த அடிப்படையில் அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் பிற கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. நட்பின் அடிப்படையில் குடும்ப நிகழ்வுகளில் பங்குபெறுவதற்கும் கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad