தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவர் பலி! - நடந்தது என்ன?
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, முதன்
முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரசில், ஸ்பெயின், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, உலக நாடுகள் அமல்படுத்தின.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த
தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜப்பானில் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்துள்ளனர்.
அந்த தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்தது பின்னர் நடைபெற்ற விசாரணையில் தெரிய வந்ததாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment