புதிய சர்ச்சையில் பிரசாந்த் கிஷோர்; மேலும் சறுக்குகிறதா காங்கிரஸ்?
கொள்கைகள், கோட்பாடுகளை முன்வைத்து அரசியல் செய்து வந்த கட்சிகள், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் வியூக நிபுணர்களின் வழியில் அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு மாறியுள்ளனர்.
அந்த வகையில் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஐபேக் நிறுவனம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு மாநில அரசியலில் ஐபேக் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடியை பிரதமராக்கி பாஜகவை அரியணையில் அமரவைப்பதில் பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு பிகாரின் ஐக்கிய ஜனதா தளம், பஞ்சாபில் காங்கிரஸ், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக என பல்வேறு மாநிலத் தேர்தல்களில் ஐபேக் நிறுவனம் மிகத் தீவிரமாக செயல்பட்டது.
இதில் சில தோல்விகளை
சந்தித்தாலும், பல மாநிலங்களில் வெற்றிக் கனியை பறித்து தந்துள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் பிரபலமானார். சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பணியை கைவிடப் போவதாக அறிவித்தார். பொது வாழ்க்கையில் சிறிது ஓய்வெடுக்க விரும்புவதாகவும், அதன்பிறகு தனது அடுத்தகட்ட பயணம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதையொட்டி பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இவருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்ததாக வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவியிருக்கிறது.
No comments:
Post a Comment