திருப்பதியில் இவர்களுக்கு சிக்கல்; ரூட்டை மாத்தும் ஆந்திர மாநில அரசு!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகித்து வரும் தேவஸ்தான வாரியத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
பிற மாநிலங்களுக்கும் தேவஸ்தானத்தில் இடமளிக்க வேண்டும் என்று எந்தவொரு விதிமுறையும் கிடையாது. இருப்பினும் நல்லுறவை கடைபிடிக்கும் வகையில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். இந்நிலையில் ஆந்திர மாநில அரசுக்கும், தெலங்கானா மாநில அரசுக்கும் இடையில் கிருஷ்ண நதிநீர் பிரச்சின
ை பெரும் தலைவலியாக உருப்பெற்றுள்ளது. ராயலசீமா நீர்ப்பாசனத் திட்டம் மூலம் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து இருமடங்கு கிருஷ்ணா நதிநீரை ஆந்திர அரசு எடுத்துக் கொள்ளும் நிலை இருப்பதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெலங்கானா அரசு புகார் அளித்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் நேரில் ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் ஆந்திர அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு புதிதாக அமையவுள்ள தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களில் தெலங்கானா மாநிலத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment