சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூர் விடுவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூர் விடுவிப்பு!

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூர் விடுவிப்பு!

கடந்த 2014ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சசி தரூர் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீதான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சசி தரூருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.

சசி தரூர் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் அரசு தரப்பில் ஆதாரங்களை வெளிப்படுத்த இயவில்லை. சுனந்தா உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் கூட அவரின் உடலில் எந்த விஷமும் கலக்கவில்லை என சசி தரூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மனரீதியாக சசி தரூர் அவரை தொந்தரவு செய்துள்ளார். இது எதிர்பாராத மரணம் அல்ல, திட்டமிட்ட மரணம், விஷம் செலுத்தப்பட்டுள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பிலும், அரசு தரப்பிலும் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை டெல்ல ி சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் இருந்து அவரின் கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூரை விடுவித்டு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகாலம் நான் அனுபவித்த மனரீதியான தொந்தரவுகளில் இருந்து விடுபட்டது மிகப்பெரிய நிம்மதி. நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் நன்றி என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad