வெளிநாடு செல்லும் இந்தியர்களே; இதோ சூப்பர் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

வெளிநாடு செல்லும் இந்தியர்களே; இதோ சூப்பர் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க!

வெளிநாடு செல்லும் இந்தியர்களே; இதோ சூப்பர் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க!

இங்கிலாந்து நாட்டிற்கு வருகை தரும் பல்வேறு வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் சூழலில், கடந்த 8ஆம் தேதி அன்று ரெட் லிஸ்ட் பயணப் பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் FCDO எனப்படும் வெளிநாட்டு, காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி புதிய தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக FCDO வெளியிட்டுள்ள தகவலில், கடந்த மே மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய உச்சம் தொட்டது.

இதையடுத்து படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டும் தொடர்ந்து இயங்கலாம். டிக்கெட் முன்பதிவு, முக்கியமான பயண வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவற்றிற்கு ஏர்லைன்ஸ் இணையதளத்தை அணுக வேண்டும்.


உங்களின் பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக ‘Entry Requirements' பகுதியை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் இந்தியாவிற்கான நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் தேவைப்படும் விஷயங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டது. அதேசமயம் நீங்கள் பயணம் செய்யும் ஏர்லைன்ஸ் உடன் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தில் இருங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளின்படி, இந்தியாவில் இருந்து வரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட இங்கிலாந்து குடிமக்களுக்கு தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் கிடையாது. இருப்பினும் பயணத்திற்கு முன்பான பரிசோதனை, இங்கிலாந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குள் எடுக்க வேண்டிய பிசிஆர் பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை பொறுத்தவரை இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கீகரித்தவை மட்டுமே ஏற்கப்படும்.

அதில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பயணம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக போட்டிருக்க வேண்டும். பிற நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போட்டவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து திரும்பிய உடன் 2வது, 8வது நாளில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad