குப்பை லாரி பின்னே சென்ற வாகனத்தின் மீது குப்பை பெட்டி விழுந்து விபத்து: சிவகங்கை நகராட்சி நிலை இதுதானா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

குப்பை லாரி பின்னே சென்ற வாகனத்தின் மீது குப்பை பெட்டி விழுந்து விபத்து: சிவகங்கை நகராட்சி நிலை இதுதானா!

குப்பை லாரி பின்னே சென்ற வாகனத்தின் மீது குப்பை பெட்டி விழுந்து விபத்து: சிவகங்கை நகராட்சி நிலை இதுதானா!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இடையர் தெரு பகுதியில் நகராட்சி குப்பை வாகனமும்,சரக்கு வேனும் எதிரெதிரே வந்த நிலையில், வளைவில் திரும்பிய போது, நகராட்சி குப்பை லாரியிலிருந்த பெட்டி திடீரென சரக்கு வாகனத்தின் பின்புறம் சரிந்து விழுந்தது.
இதில் சரக்கு வாகனத்தின் வலதுபுற பகுதி கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் இரண்டு ஓட்டுனர்களும் வாகனங்களை அப்படியே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் வந்து தகராறில் ஈடுபட்டிருந்த ஓட்டுனர்களை விசாரணை செய்தனர்.

தொடர்ந்து 2பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சாலையில் நின்ற இரு வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. நகராட்சி வாகனம் தரமற்ற முறையிலிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad