காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு!
ஆப்கான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, அங்கிருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதால், காபூல் விமான நிலையத்தில் பதற்றம் நிலவி வருகிறது. காபூல் விமான நிலையத்தின் ஒருபகுதி தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக
வெளியேற அப்படைகள் உதவி புரிந்து வருகின்றன.
ஆனால், காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், காபூல் விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலான ஏபி கேட், கிழக்கு கேட் அல்லது வடக்கு கேட் வழியாக வர வேண்டும். மற்ற வாயில்களில் செல்ல வேண்டாம் என்று பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதால்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேசமயம், காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்திருந்தது. இதே தகவலை ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் தெரிவித்திருந்தன. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. தலிபான்கள் கட்டுக்குள் வந்ததும் காபூலினுள் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் நுழைந்து விட்டதாக தகவல்கள்
வெளியான நிலையில், இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment