அமெரிக்காவுக்கு தலிபான்கள் பச்சை கொடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

அமெரிக்காவுக்கு தலிபான்கள் பச்சை கொடி!

அமெரிக்காவுக்கு தலிபான்கள் பச்சை கொடி!

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து, அந்நாட்டை கைபற்றியுள்ள தலிபான்கள் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்களிடம் ஆப்கான் வீழ்ந்ததையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதுதவிர ஆப்கானியர்களே பலரும் அங்கிருந்து வெளியேற முனைப்பு காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவை பொறுத்தவரை அந்நாட்டு தூதர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆப்கனில் உள்ள அமெரிக்கர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்கா படைகளும் வெளியேறும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில் அங்கு சில அமெரிக்க படையினர் உள்ளனர். சுமார் 1,500 அமெரிக்கர்கள் மட்டுமே இன்னும் ஆப்கனில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


காபூல் விமான நிலையத்தின் ஒருபகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும் அவர்கள் அங்கிருந்து பிற நாட்டவர்கள் செல்லவும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். ஆப்கனை விட்டு ஏற்கனவே சொன்ன தேதிக்குள் வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் என்று அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வரும் 31ஆம் தேதிக்குள் வெளியேற தலிபான்கள் அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு வருகிற 31ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என்று தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதுகுறித்து ஜெர்மனி நாட்டு தூதர் மார்கஸ் போட்ஸெல் தனது ட்விட்டர் பக்கத்தில், உரிய ஆவணங்களை கொண்ட ஆப்கனில் இருக்கும் மக்கள் வருகிற 31ஆம் தேதிக்குப் பின்னரும் கூட வர்த்தக விமானங்கள் மூலம் வெளியேற அனுமதிப்பதாக தலிபான்களின் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ஷேர் முகமது அப்பாஸ் தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad