சிவகங்கை கிராமத்தை பாராட்டிய பிரதமர் மோடி: இதுதான் காரணம்!
புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரபுசாரா எரிசக்தி திறன்கள் ஊக்குவிக்கபப்டுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தல், பயோகேஸ் உள்ளிட்ட பல திட்டங்கள் இதற்காக ஊக்குவிக்கப்படுகின்றன.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் மானியமும் அளித்து வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை அருகேவுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் தினமும் 200 கிலோ வரை கழிவுகளை சேகரித்து, அந்த கழிவுகள் மூலம் பயோகேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காஞ்சிரங்கால் ஊராட்சியினர் இது
தொடர்பாக ஆலோசித்து முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலை பெற்று கடந்த 10ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.66 லட்சம் திட்ட மதிப்பில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment