உள்ளாட்சி தேர்தல் தேதி: அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

உள்ளாட்சி தேர்தல் தேதி: அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

உள்ளாட்சி தேர்தல் தேதி: அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

திருச்சி உறையூர் குறத் தெரு திருப்பத்தில் மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசியதாவது:
ரூ.54.27 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 103.425 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் நான்கு இடங்களில் மேல் நில்நிலை நீர்தேக்க தொட்டியும் இரண்டு இடங்களில் கீழ்நிலை நீர்தேக்க தொட்டியம் அமைக்கப்பட உள்ளது.

ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. திருச்சியில் சிந்தாமணி-மாம்பழச்சாலை இணைக்கும் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது.அந்த பாலத்திற்கு அருகிலேயே ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம் கட்டப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை சாலை விரிவாக்கமும் புதிய சாலைகள் அமைக்கப்படும் அதே போல உறையூர் முதல் வயலூர் வரை நேரடி சால ை அமைக்கப்படும். திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை மார்கெட் அமைக்கப்படும்.திருச்சியில் செயல்படும் வேறு எந்த சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படாது.

மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள்.அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள்.

மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் நீங்கலாக தேர்தல் நடத்தப்படும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அந்த தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார் என இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad