மேம்பால விபத்து: காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

மேம்பால விபத்து: காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்!

மேம்பால விபத்து: காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்!

மதுரை மேம்பால விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை நத்தம் சாலையில் மதுரை - செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது.

மேலை நாடுகளில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு, இரண்டு அடுக்கு, மூன்றடுக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்ட சாதாரண மேம்பாலம் தரமற்றதாக இருந்ததே பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று குடியிருப்புகள் தரமற்றதாக உள்ளது என செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.

எனவே இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் இது போன்ற விபத்துகள் தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறா வண்ணம் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad