ஆகஸ்ட் 29: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,11,837 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 17,322பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 543786 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்
இதுவரை 533516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8397 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 235713 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 231395 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2260
பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இன்று 108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 165203 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 161631 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2429
பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24
மணி நேரத்தில் 1,61,390 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,11,24,414 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று 1,753 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,59,637 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,878 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment