மாற்றுத்திறனாளிகளின் மானிய கோரிக்கை: டிசம்பர் 3 இயக்கம் வைக்கும் கோரிக்கை
எதிர்வரும் செப்டம்பர் 1 அன்று நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் மானிய கோரிக்கை விவாதத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வீதம் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர தமிழநாடு அரசிற்கு டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை வைக்கிறது.
1. தமிழக உள்ளாட்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தம் செய்து மாற்றுத்திறனாளிகள் அரசியலில் பங்கேற்கும் வண்ணம் 5 சதவீத இட
ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2. மாற்றுத்திறனாளிகளின் உரிமை சட்டம் 2016ல் கூறப்பட்டுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வண்ணம் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை கண்டறிய முழுநேர ஆணையம் அமைக்க வேண்டும்.
3. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய ஆணையிடும் அரசாணை எண்
151 யை நடைமுறைப்படுத்த வேண்டும்.
4. மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தொகையை ரூ.3000 ஆகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் ரூ. 1500 உதவித்தொகையை ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
5. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் பிரிவு 74 (2) கூறப்பட்டுள்ளது போல் உரிமைகளுக்கான ஆணையராக மாற்றுத்திறனாளிய
ை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment