பாராலிம்பிக்கில் நிஷாத் குமார் வெள்ளி வென்றார் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தமது பதிவில், வீரர் நிஷாத் குமாருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன். அவர் தாண்டிய உயரம் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது! உயரம் தாண்டும் வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை மட்டும் வெல்லவில்லை.... ஆசிய அளவில் அவர் ஏற்கனவே படைத்த சாதனையை அவரே சமன் செய்துள்ளார். அவரது சாதனைப் பயணம் தொடர வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம் ஆகும்!'' என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பவினா பென் படேல்
வெள்ளி பதக்கம் வென்றார். இதனால் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் இதுவரை கிடைத்துள்ளன. கடுமையாக போராடி இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தாலும் பவினா பென் வெள்ளி பதக்கம் பெற்று தந்துள்ளார்.
No comments:
Post a Comment