கலைஞரின் நிழலாகத் தொடர்ந்தவர் துரைமுருகன் - கனிமொழி போட்ட ட்வீட் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

கலைஞரின் நிழலாகத் தொடர்ந்தவர் துரைமுருகன் - கனிமொழி போட்ட ட்வீட்

கலைஞரின் நிழலாகத் தொடர்ந்தவர் துரைமுருகன் - கனிமொழி போட்ட ட்வீட்

தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காண்கிறார் திமுகவைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இந்நிலையில், சட்டசபையில் இன்று அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட திமுக உறுப்பினர்கள் பலரும் துரைமுருகனின் சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டி வாழ்த்தினர். இந்நிலையில், திமுகவின் எம்பியான கனிமொழியும் ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, ''தன் இளமைக் காலத்திலிருந்தே தலைவர் கலைஞரின் நிழலாகத் தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்தவருமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் சட்டமன்றப் பொன்விழா நாள். தமிழக முதலமைச்சர் தளபதியின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் அவர்.

என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றவர். கழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் எப்போதும் துணையாக நிற்கும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகனுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad