திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதி: மெட்ரோ ரயில் நிர்வாகம் அசத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதி: மெட்ரோ ரயில் நிர்வாகம் அசத்தல்!

திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதி: மெட்ரோ ரயில் நிர்வாகம் அசத்தல்!

டெல்லியில், மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை, இனி, திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக் கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாதுகாப்பான இடம் அளித்து திருநங்கைகளுக்கு எதிரான பாலின பாகுபாட்டை களையும் முயற்சியில், மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக் கழிவறைகளை தவிர்த்து தங்களின் பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மற்ற பயணிகளுக்கான கழிவறைகளை தவிர்த்து 347 மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் உள்ளன. இது அவர்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு உதவும் வகையில் இக்கழிவறைகளில், ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் போல் திருநங்கைகளின் சின்னம் பொறிக்கப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad