தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடக்கிறது: எச்.ராஜா விமர்சனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடக்கிறது: எச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடக்கிறது: எச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடைபெற்று வருவதாக பா.ஜ.க., முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.க., நிர்வாகி இல்ல வரவேற்பு விழாவில் எச்.ராஜா பங்கேற்றார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசியதாவது:
முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிய தி.மு.க., அரசு அடுத்து வர இருக்கின்ற ஆறு மாதங்களில் 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தற்போது கடன்கார ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எப்போதும் நிதி பற்றாக்குறை பண வீக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் நிதி அமைச்சர் அகவிலைப்படி கொடுக்க முடியாது என்றும், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றால் தகுதியானவர்களை பார்த்து கொடுப்பதாகவும் கூறுகிறார்.

மேலும், 1967ல் கூறிய அதே ஏமாற்றுத் தனத்தை மீண்டும் தி.மு.க.,வினர் செய்கிறார்கள். அப்போது, மூன்று படி அரிசி கொடுக்கிறேன் என்று கூறினார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மறுநாள் மூன்று படி லட்சியம் ஒரு படி அரிசி நிச்சயம் என்று கூறினார்கள். அதுவும் சென்னையில் ஒரே ஒரு ரேஷன் கடையில் மட்டும் தான் வழங்கினார்கள்.

வருவாயில் 30 சதவீதத்துக்கும் மேல் கடன் வாங்கிவிட்டால் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும். அரசின் வருவாயில் 70 % வருமானம் ஊதியத்திற்கு, பென்ஷனுக்கும் செல்கிறது. மீதி இருக்கின்ற 30 % வருமானத்தில் வட்டியை கட்டுவதா அல்லது கடனை திருப்பிக் கொடுப்பதா?

No comments:

Post a Comment

Post Top Ad