சசிகலாவுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து... ஆனால் இவ்வளவு ஐஸ் தேவையா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

சசிகலாவுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து... ஆனால் இவ்வளவு ஐஸ் தேவையா?

சசிகலாவுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து... ஆனால் இவ்வளவு ஐஸ் தேவையா?

ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படும் சசிகலாவின் 67 ஆவது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் இன்று (ஆகஸ்ட் 18) கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பே சசிகலா பிறந்தநாளை கொண்டாட பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் உளம் மகிழ்கிறேன்" என்று சீமான் உருக்கமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad