நாங்க இதுகெல்லாம் பயப்படமாட்டோம்... கொடநாடு கொலை வழக்கு விசாரணை பத்தி இபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

நாங்க இதுகெல்லாம் பயப்படமாட்டோம்... கொடநாடு கொலை வழக்கு விசாரணை பத்தி இபிஎஸ்!

நாங்க இதுகெல்லாம் பயப்படமாட்டோம்... கொடநாடு கொலை வழக்கு விசாரணை பத்தி இபிஎஸ்!

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஏறக்குறைய முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28 ஆம் தேதி வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் எங்களை அச்சுறுத்த பொய் வழக்கு போட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதடியவர்களே தற்போது அரசு வழக்கறிஞர்களாக மாறி வழக்கை நடத்தி வருகின்றனர்.

திமுக அரசு திட்டமிட்டே என் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள். தொண்டர்களை காக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களை முடக்க நினைப்பது எப்போதும் நடக்காது.

தேர்தலின் போது திமுக 505 க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், அவற்றை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பு இந்த பொய் வழக்கு முயற்சியை கையிலெடுத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

சயன், மனோஜ், பாலைய ரவி ஆகிய மூவரும் பேசிய வீடியோ முன்பே யூடியூப் சேனல்களில் வந்துள்ளது. அப்போதிலிருந்து பொய் வழக்கு போடும் முயற்சி நடந்து வந்துள்ளது. நான் முதலமைச்சாராக இருந்த காலம் முதலே இந்த திட்டத்தினை தீட்டி வருகின்றனர். எங்களை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதரண மக்களுக்கு திமுக ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?

எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நேரமில்லா நேரத்தில் நான் என்னுடைய பிரச்சனையை பேச முற்பட்டேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய பிரச்சனையை எழுப்ப எனக்கு உரிமை உண்டு என்று

எடப்பாடி பழனிசாமி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad