இறைச்சி, மதுபானங்கள் விற்க தடை: முதலமைச்சர் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

இறைச்சி, மதுபானங்கள் விற்க தடை: முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

 இறைச்சி, மதுபானங்கள் விற்க தடை: முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

உத்தர பிரதேச மாநிகம் மதுராவில், இறைச்சி, மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட மதுரா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததாகக் கருதப்படும் ஜென்ம பூமியின் கோவிலில் வழிபட்டார். பிறகு அங்குள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
மதுரா மாவட்டத்தில் இனி மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு இங்குள்ள பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதை அடுத்து, இங்குள்ள ஏழு தெய்வீகத்தலங்கள் புனிதத்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டன. இப்போது அந்த ஏழு தலங்களிலும் மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்க பொது மக்கள் கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதன் விற்பனைக்கு இந்த ஏழு ஊர்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இனி இவ்விரண்டையும் இந்த ஏழு ஊர்களிலும் விற்பனை செய்பவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி, மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும். மதுராவில் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பின்படி, மதுரா மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகிய ஊர்களில், இறைச்சி, மதுபானங்கள் விற்பனை செய்ய தடை அமலுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad