காலியாகும் பா.ஜ.க., கூடாரம்.. அணி மாறும் எம்.எல்.ஏ.,க்கள் - அதிருப்தியில் பா.ஜ.க., மேலிடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

காலியாகும் பா.ஜ.க., கூடாரம்.. அணி மாறும் எம்.எல்.ஏ.,க்கள் - அதிருப்தியில் பா.ஜ.க., மேலிடம்!

காலியாகும் பா.ஜ.க., கூடாரம்.. அணி மாறும் எம்.எல்.ஏ.,க்கள் - அதிருப்தியில் பா.ஜ.க., மேலிடம்!

மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றன் பின் ஒன்றாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருவது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 210-க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிக் கொடியை நாட்டியது. எதிர்க்கட்சியான பா.ஜ.க., வெறும் 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க.,வை எதிர்த்து தனி ஒரு பெண்மணியாக மம்தா பானர்ஜி துணிந்து போராடியதே தேர்தல் வெற்றிக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

​முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 1,500 வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். எனினும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

​பா.ஜ.க.,வுக்கு முதலில் குட் - பை சொன்ன முகுல் ராய்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 1,500 வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். எனினும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

​பா.ஜ.க.,வுக்கு முதலில் குட் - பை சொன்ன முகுல் ராய்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தனது மகனுடன், மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் இணைந்தார். இதை பா.ஜ.க. ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இது பா.ஜ.க.,வுக்கு பெரும் அடியாக விழுந்தது. இவரைத் தொடர்ந்து, பா.ஜ.க., எம்.எல்.ஏ., தன்மே கோஷ், நேற்று, அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad