40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு - 3 மாதங்களுக்குள் இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு!
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் விதிமீறி கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பை, மூன்று மாதங்களுக்குள் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நொய்டாவில், சூப்பர் டெக் நிறுவனம் அபெக்ஸ் மற்றும் சியானே என்ற இரட்டை கோபுர குடியிருப்பு திட்டத்தை தொடங்கியது. 915 குடியிருப்புகள், 21 கடைகள் அமைப்பது திட்டத்தின் நோக்கம்.
கட்டுமான பணிகளின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளன. 633 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு, தீத்தடுப்பு, கட்டுமான திட்டம் போன்ற பல்வேறு விதிகளை மீறி மிக நெருக்கமாக இரட்டை கோபுர குடியிருப்பு அமைக்கப்பட்டதாக, 2014ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட்
மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். நொய்டா மாநகராட்சி அதிகாரிகளின் உடந்தையால் தான் விதிமீறல் சாத்தியமானதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment