இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் எது தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் எது தெரியுமா?

இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் எது தெரியுமா?

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசாவது செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஹிமாச்சல பிரதேசம் பெறுகிறது.

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக, முதியவர்களுக்கும், மூன்றாவது கட்டமாக 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஆளும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசாவது செலுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஹிமாச்சல பிரதேசம் பெறுகிறது.

இதனால் ஹிமாச்சல பிரதேச மாநில அரசுக்கு பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இளைஞர்கள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாச்சல் மாறியுள்ளது. அங்கு இளைஞர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இந்த சாதனையை எட்டியுள்ள மாநில நிர்வாகத்திற்கு பாராட்டுகள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தடுப்பூசி பிரசாரம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad