உலகிலேயே மிகவும் குள்ளமான பசு மரணம்!
உலகில் எப்போதும் அதிக உயரம், மிகவும் குள்ளம் போன்ற விஷயங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், உலகிலேயே மிகவும் குள்ளமான பசு என்று அறியப்பட்ட பசு ஒன்று இருந்தது. வங்கதேச தலைநகர்
டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் வளர்ந்து வந்த அந்த பசுவின் பெயர் ராணி.
இந்த பசுவானது 20 செ.மீ. உயரம், 68 செ.மீ. நீளம், 28 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இந்த பசுவை பற்றிய தகவல் அறிந்ததும். கடந்த மாதம் கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் அதனை காண ஏராளமானோர் குவிந்தனர். ராணி பசுவின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ஆம் அண்டில் அங்கீகரித்திருந்த நிலையில், ராணி பசு அதனை விடவும் குள்ளமான பசுவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து,
ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதற்காக விண்ணப்பமும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முன்னரே ராணி பசு மரணமடைந்து விட்டது. வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான வாயு சேர்ந்ததால், ராணி பசு மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி பசுவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment