மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை செலுத்த ஏப்ரல் மாதம் 30ம் தேதியே கடைசி தேதியாக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் தற்போது பொது முடக்கம் காரணமாக ஆண்டு வரிக்கான காலக்கெடு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad