"ட்விட்டர் பறவை"யை பொறித்த தொண்டரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த மேலிடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

"ட்விட்டர் பறவை"யை பொறித்த தொண்டரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த மேலிடம்!

"ட்விட்டர் பறவை"யை பொறித்த தொண்டரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த மேலிடம்!

"ட்விட்டர் பறவை"யை பொறித்த காங்கிரஸ் கட்சி தொண்டரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அக்கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டார்.

இது ட்விட்டர் விதிகளுக்கு முரணானது எனக் கூறி ராகுல் காந்தியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. மேலும் ஒருசில காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ட்விட்டர் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. சில நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து, ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர் ஜி.வி. ஸ்ரீ ராஜ் என்பவர், ட்விட்டர் நிறுவனத்தை கண்டிக்கும் வகையில் ட்விட்டர் பறவையை எண்ணெயில் பொறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு கொரியர் அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு, ஸ்ரீ ராஜூக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. ட்விட்டர் பறவை பொறிக்கப்பட்ட சம்பவம், ராகுல் காந்திக்கும், கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad