இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் வீடு, 16 சொகுசு கார்கள் பறிமுதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் வீடு, 16 சொகுசு கார்கள் பறிமுதல்!

இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் வீடு, 16 சொகுசு கார்கள் பறிமுதல்!

இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், வீடு, 16 சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணி - வி.கே.சசிகலா அணி அக்கட்சி இரண்டாக உடைந்தது. இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

தேர்தல் ஆணையத்திடம் சின்னத்தை மீட்க பெங்களூரைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் தரப்பு டீல் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அவரின் கூட்டாளிகள், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவற்றில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013ம் ஆண்டு போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சுகேஷ் சந்திரசேகரும், அவரின் தோழி நடிகை லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு சென்னை கானத்தூரில் சொந்தமாக உள்ள பண்ணை வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad