நடத்துனரின் இறப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்காத போக்குவரத்து கழகம்: அரசு பேருந்து ஜப்தி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

நடத்துனரின் இறப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்காத போக்குவரத்து கழகம்: அரசு பேருந்து ஜப்தி

நடத்துனரின் இறப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்காத போக்குவரத்து கழகம்: அரசு பேருந்து ஜப்தி

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன். விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக கண்டக்டராக பணியாற்றி வந்த இவர் கடந்த 26.1.1995 அன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு பேருந்தில் பணியில் இருந்தார். பேருந்து அச்சிரப்பாக்கம் அருகே செல்லும்போது பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில்
செந்தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அச்சிரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு செந்தாமரைக்கண்ணனின் மனைவி வசந்தி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 1996 அன்று வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, பாதிக்கப்பட்ட செந்தாமரைக்கண்ணன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் லாரி சார்பில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியும் பாதிக்கப்பட்ட செந்தாமரைக்கண்ணன் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகமும், இன்சூரன்ஸ் கம்பெனியும் சேர்ந்து நஷ்ட ஈடாக 12 லட்சத்து 75 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி இன்சூரன்ஸ் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்கியது. ஆனால், அரசு போக்குவரத்துக்கழகம் வழங்காததால் மனுதாரர் சார்பில் 2019 அன்று நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாதன், பாதிக்கப்பட்ட செந்தாமரைக்கண்ணனின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து 16 லட்சத்து 92 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 7.8.2021 அன்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்கவில்லை என்பதால் இன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட இருந்த அரசு பேருந்தை கோர்ட்டு உத்தரவின்படி ஜப்தி செய்தனர். அதன் பிறகு பேருந்து விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad