தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்!

கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால் மாணவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 முதல் 12 வரை உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாநகராட்சி ஆணையர் கேபி.கார்த்திகேயன் தலைம ை வகித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டார்.“*ஒவ்வொரு பள்ளியிலும் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

*ஒவ்வொரு பள்ளி வளாகத்தில் நுழைவுவாயில் அருகில் மாணவ, மாணவிகள் கைகளைக் கழுவுவதற்கு வசதியாக கைகளைக் கழுவுமிடம் ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad