திருமணத்துக்கு வாடகைக்குவிடப்பட்ட அண்ணா நூலகம்: பேரவையில் பொங்கிய முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

திருமணத்துக்கு வாடகைக்குவிடப்பட்ட அண்ணா நூலகம்: பேரவையில் பொங்கிய முதல்வர்!

திருமணத்துக்கு வாடகைக்குவிடப்பட்ட அண்ணா நூலகம்: பேரவையில் பொங்கிய முதல்வர்!

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
அப்போது செங்கம் தொகுதி உறுப்பினர் கிரி (திமுக) பேசும் போது, “அண்ணாவின் பெயரில் கழகம் அமைத்து, அண்ணாவின் படத்தை கொடியில் வைத்து ஆட்சி செய்தவர்கள் அண்ணா மறுமலர்ச்ச ி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழ்படுத்திவிட்டார்கள்” என்று கூறினார்.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து பேசினார். “நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்போதுள்ள அவை முன்னவர் என்னை அழைத்து பாராட்டினார். கல்வி தொலைக்காட்சி இந்தியாவிலயே முதல்முறையாக தமிழகத்தில் உருவாக்குகின்ற போது அண்ணா நூலகத்தில் தான் உருவாக்கப்பட்டது. சிவில் சர்வீஸ் என்று சொல்லப்படுகின்ற பல்வேறு பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதிலளிக்கும் விதமாக, “திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு, நூலகத்தை பாழடிக்கும் ஒரு சூழ்நிலை உருவானது. அதனால், நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வேறு எந்த நிகழ்ச்சியும், திருமண நிகழ்ச்சி எல்லாம் நடக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில்தான் அவைகள் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் கழக ஆட்சி வந்த பிறகு இன்னும் சீர்படுத்துகிற, செம்மைப்படுத்துகிற அந்த பணிகளில் இந்த அரசு ஈடுபட்டு இருக்கிறது என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad