எங்கப்பன் குதிருக்குள் இல்லை: கொடாநாடு மர்மம் பற்றி ஸ்டாலின் பேச்சு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது விலகாத மர்மமாகவே இன்னும் உள்ளது.
இதனிடையே, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று மறுவிசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றக் கூட்டத்தொடரில்
இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, கலவாணர் அரங்கின் வெளியே அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கில் தனது பெயரை சேர்க்க சதி செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், கொடநாடு விவகாரம் குறித்த விவாதத்தின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்று அதிமுகவினரை சாடினார். தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment