மூன்று மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 18ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கன மழையும், நீலகிரி, கோயம்பத்தூர், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை,
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 19) நீலகிரி, கோயம்பத்தூர், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் ஒருசில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை 9, நன்னிலம் (திருவாரூர்) 8, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்) தலா 7, மயிலாடுதுறை 6, கள்ளக்குறிச்சி 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கிழச்செருவை (கடலூர்) தலா 4, கூடலூர் பஜார் (நீலகிரி), மேட்டுப்பட்டி
(மதுரை), காரைக்கால் திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 3, செந்துறை (அரியலூர்), கொடைக்கானல், செட்டிக்குளம் (பெரம்பலூர்), பெரியகுளம் (தேனி), அந்நூர் (கோவை) தலா 2, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பொன்மலை (திருச்சிராப்பள்ளி) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment