ரோஜா ரோஜாதான்: வானதி சீனிவாசனை வெளுத்து வாங்கிய பிடிஆர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

ரோஜா ரோஜாதான்: வானதி சீனிவாசனை வெளுத்து வாங்கிய பிடிஆர்!

ரோஜா ரோஜாதான்: வானதி சீனிவாசனை வெளுத்து வாங்கிய பிடிஆர்!

இந்திய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள் ஒன்றிய அரசு என்ற சொற்றொடரை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது கடுமையான சர்ச்சையாக வெடித்த நிலையில், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்திய அரசைக் குறிக்க எந்த சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவிட முடியாது என்று தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “இதுவரை மத்திய அரசு என அழைத்துவிட்டு சமீபத்தில் ஒன்றிய அரசு என அழைப்பதை நாம் பார்க்கிறோம். ரோஜாவை எந்த பெயரை வைத்தாலும் அதன் வாசத்தை மாற்ற முடியாது. அதே போல மத்திய அரசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும் மத்திய அரசின் அதிகாரத்தை குறைக்க முடியாது. சமூகநீதிக்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் ச ேர்ந்தவர் அவர்” என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர்

பழனிவேல் தியாகராஜன், ரோஜா ரோஜா தான். ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா என்று கேள்வி எழுப்பினார். குஜராத் முதல்வராக இருந்த போது மோடி எழுப்பிய கேள்விகள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக குறிப்பிட்ட பழனிவேல் தியாகராஜன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவைக்கு வந்துள்ளாரா அல்லது ஒரு அரசியல் கட்சியின் பாதுகாவலராக வானதி சீனிவாசன் வந்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே வானதி சீனிவாசனுக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் சமூக வலைதளமான ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad