கேரளாவில் இப்படியொரு அதிர்ச்சி; கலக்கத்தில் பொதுமக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

கேரளாவில் இப்படியொரு அதிர்ச்சி; கலக்கத்தில் பொதுமக்கள்!

கேரளாவில் இப்படியொரு அதிர்ச்சி; கலக்கத்தில் பொதுமக்கள்!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மிகவும் திறம்பட கையாண்டது. நாட்டிற்கே முன்மாதிரியாக ‘கேரளா மாடல்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் காட்டியது. ஆனால் நடப்பாண்டு பரவிய இரண்டாவது அலையில் நிலைமை கைமீறிப் போனது. நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்புகளை பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு செல்லும் அளவிற்கு மோசமான பாதிப்பை கேரளா சந்தித்தது.

பாசிடிவ் விகிதம் அதிகரிப்பு

தற்போதும் தினசரி தொற்று எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிகபட்சமாக 18 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வரும் மாநிலமாக கேரளா உள்ளது. இதனால் அண்டை மாநிலங்கள் மிகவும் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் கேரளாவில் கொரோனா பாசிடிவ் விகிதம் 15 சதவீதத்தை தாண்டியுள்ளது.

சமூகப் பரவலான கொரோனா

அதற்கு முந்தைய தினம் 14 சதவீதத்திற்கும் கீழ் இருந்த நிலையில், மீண்டும் அதிகரித்து 15.11 சதவீதத்தை அடைந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது நேற்று 18,582 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 102 பேர் பலியாகி இருக்கின்றனர். புதிய பாதிப்புகளில் 141 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். உள்மாநிலத்தில் பரவிய தொற்றால் 17,626 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

தடுப்பூசி மீதான நம்பிக்கை

அதில் சுகாதாரப் பணியாளர்கள் மட்டும் 68 பேர் ஆவர். தற்போது மாநிலம் முழுவதும் 4,99,031 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். அதில் 4,71,395 பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். 27,636 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். WIPR விகிதத்தின் அடிப்படையில், கேரளாவில் 87 உள்ளாட்சி அமைப்புகளும், 634 வார்டுகளும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடிற்குள் இருக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad