முதலமைச்சரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அதிரடி கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

முதலமைச்சரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அதிரடி கைது!

முதலமைச்சரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அதிரடி கைது!

மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய கேபினட் அமைச்சர் நாராயண் ரானேவை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அண்மையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நாராயண் ரானே, எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. அதை கூட பாதுகாவலர்களிடம் கேட்கிறார். நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சித் தொண்டர்கள், ஒன்றிய கேபினட் அமைச்சர் நாராயண் ரானேவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும், மும்பையில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்தை சிவசேனா கட்சித் தொண்டர்கள் சூறையாடினர்.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை இழிவாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மீது சிவசேனா கட்சியினர் புகார் அளித்தனர். மேலும், அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரத்தால் தலைநகர் மும்பை பரபரப்பாக காட்சி அளித்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது

No comments:

Post a Comment

Post Top Ad