ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் ஆலோசனை!

ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் ஆலோசனை!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆலோசனை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

தலிபான்கள் தலைமையிலான அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் மக்களின் நலன் கருதி, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, எனது நண்பர் அதிபர் புடினுடன் விரிவாகவும், பயனுள்ள வகையிலும் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனையில், கொரோனுவுக்கு எதிரான இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பு உள்ளிட்ட இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். முக்கிய விவகாரங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் ஒப்புக் கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad