"இதெல்லாம் பாத்து பயப்பட மாட்டோம்!" - ஒன்றிய அமைச்சர் கைதுக்கு நட்டா கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

"இதெல்லாம் பாத்து பயப்பட மாட்டோம்!" - ஒன்றிய அமைச்சர் கைதுக்கு நட்டா கண்டனம்!

"இதெல்லாம் பாத்து பயப்பட மாட்டோம்!" - ஒன்றிய அமைச்சர் கைதுக்கு நட்டா கண்டனம்!

மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை இழிவாகப் பேசிய விவகாரத்தில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு, பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.


அண்மையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நாராயண் ரானே, எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. அதை கூட பாதுகாவலர்களிடம் கேட்கிறார். நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சித் தொண்டர்கள், ஒன்றிய கேபினட் அமைச்சர் நாராயண் ரானேவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும், மும்பையில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்தை சிவசேனா கட்சித் தொண்டர்கள் சூறையாடினர். இது தொடர்பான புகாரில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை மும்பை போலீசார் இன்று பிற்பகல் அதிரடியாக கைது செய்தனர்.

இதற்கு, பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இது போன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ அடங்கி போகவோ மாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தன் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad