"எல்லாத்தையும் வித்துட்டாங்க!" - மத்திய பா.ஜ.க. அரசை கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

"எல்லாத்தையும் வித்துட்டாங்க!" - மத்திய பா.ஜ.க. அரசை கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி!

"எல்லாத்தையும் வித்துட்டாங்க!" - மத்திய பா.ஜ.க. அரசை கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி!

மத்திய அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு, நாட்டின் சொத்துகளை பரிசாக பிரதமர் நரேந்திர மோடி அளிப்பதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாட்டின் சொத்துகள் அனைத்தையும் மத்திய பா.ஜ.க., அரசு விற்று விட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துகளை வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார். நாட்டின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார்.

தேசிய சொத்துகளை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரஸ் உருவாக்கிய தேசிய சொத்துகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன் பெறும். இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதையே மோடி அரசு ஒழிக்க பார்க்கிறது.

இரண்டு, மூன்று பெரு நிறுவனங்கள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் சிறு, குறு தொழில் துறையே அழிந்துவிடும். சிறு, குறு தொழில் துறை அழிவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாகும். குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் அரசின் சொத்துகளை தாரைவார்க்கிறது மோடி அரசு.கலைஞர்!


நீண்ட காலமாக நஷ்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். குறைந்த சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனங்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். ஒரு குறிப்பிட்ட துறையில் தனியார் துறை ஏகபோகத்தை சரிபார்க்கும் திறனுடன் நாங்கள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவில்லை.

நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் எங்கள் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு தர்க்கம் இருந்தது. நாங்கள் மூலோபாயத் தொழில்களைத் தனியார்மயமாக்கவில்லை. ரயில்வேயை மூலோபாயத் தொழிலாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் அது லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களைக் கொண்டு செல்கிறது மற்றும் நிறைய பேரை வேலைக்கு அமர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad