துபாய் புறப்பட்ட விஜயகாந்த்; வைரலாகும் விமான நிலைய காட்சிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

துபாய் புறப்பட்ட விஜயகாந்த்; வைரலாகும் விமான நிலைய காட்சிகள்!

துபாய் புறப்பட்ட விஜயகாந்த்; வைரலாகும் விமான நிலைய காட்சிகள்!

தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து அதிரடியாக அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். தேமுதிக தொடங்கிய காலத்தில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் முதல் எம்.எல்.ஏவாக 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து 2011 சட்டமன்ற தேர்தலில் 29 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் உயர்ந்தார்.

உடல்நிலை பாதிப்பு

2016ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து எதிர்பார்த்த வெற்றியை தேமுதிகவால் பெற முடியவில்லை. இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையொட்டி சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிகிச்சை பெற்றார். பின்னர் சென்னை திரும்பி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

வெளிநாட்டு சிகிச்சை

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டு சிகிச்சையை தவிர்த்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார். இந்த சூழலில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துபாய்க்கு செல்வதாக தெரியவந்துள்ளது.

துபாய் பயணம்

இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே சென்றனர். பின்னர் அவசர அவசரமாக விமான நிலையத்திற்கு உள்ளே சென்றுவிட்டனர். இதையடுத்து விஜயகாந்தின் மகன்

சண்முக பாண்டியன் தங்களது உடைமைகளுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad