MK Stalin: பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல்: என்ன செய்வார் முதல்வர்?
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஓரிரு வாரங்களாக நடைபெற்றன. வகுப்பறைகள் சுத்தம் செய்து தயார்படுத்தப்பட்டன.
வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 32ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
இதனால் கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துவிடாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழக கல்லூரிகளில் கேரள மாணவர்கள் அதிகளவில் பயில்கின்றனர். குறிப்பாக கோவை, ஈரோடு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் கேரள மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் இந்த பகுதிகளில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment