போலீசுக்கு தெரிஞ்சேதான் அந்த தப்பு நடக்குது... விக்கிரமராஜா பகீர் குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

போலீசுக்கு தெரிஞ்சேதான் அந்த தப்பு நடக்குது... விக்கிரமராஜா பகீர் குற்றச்சாட்டு!

போலீசுக்கு தெரிஞ்சேதான் அந்த தப்பு நடக்குது... விக்கிரமராஜா பகீர் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சேலம், வேலூர், கடலூர், கோவை ஆகிய மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்காக தனி வங்கி அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். சென்னையை சுற்றியுள்ள 4 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், மாநிலம் முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவற்றையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி கடைகளுக்கான வாடகை விகிதத்தை தமிழகம் முழுவதும் மறு ஆய்வு செய்து வாடகை சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு ஊராட்சி கடைகளுக்கு ஒரே சீரான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கும், இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வேளாண் விளை பொருட்களுக்கும் செஸ் வரி வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்.



நீலகிரியில் வாடகை பிரச்சினை காரணமாக 800 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு வாடகை பலமடங்கு உயர்த்தியதால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, வாடகை உயர்வை திரும்ப பெற்று சீரான வாடகையை நிர்ணயம் செய்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் குட்கா பொருட்களை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். இது போலீசாருக்கும் தெரியும். எனவே, அவர்களை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் எடை சாதனங்கள ை ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்கும் நிலைமையை மாற்றி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமங்களை புதுப்பிக்கும் வகையில் நடைமுறைகளை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று விக்கிரமராஜா கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad