மீண்டும் ரேஷன் கடைகளில்... வெளியாகும் சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

மீண்டும் ரேஷன் கடைகளில்... வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

மீண்டும் ரேஷன் கடைகளில்... வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நிவாரண நிதி 4000 ரூ மற்றும் மளிகைப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கியது.


ரேஷன் கடைகளில் எப்போதும் கூட்டம் முண்டியடிக்கும். நிவாரண நிதி வழங்கப்படுவதால் கூட்டம் ஒரே நேரத்தில் வரும் என்பதால் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினர். அதில் குறிப்பிட்டிருந்த தேதி, நேரத்தில் சென்று பொருள்களையும், நிவாரண நிதியையும் பெற்றுக் கொண்டனர். இதனால் கொரோனா பரவல் மையமாக ரேஷன் கடைகள் உருவாகாமல் தடுக்கப்பட்டது.



கொரோனா பரவல் இறங்கு முகத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி பாதிப்பு 32 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் போது தமிழகத்தில் 1500ஆக உள்ளது.


அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இந்நிலையில் சேலத்தில் ரேஷன் கடைகளில் 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் மீண்டும் டோக்கன் முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1,593 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில் 437 பகுதிநேர கடைகளும் அடக்கம். தற்போது கொரோனா 3ஆவது அலை அச்சம் நிலவுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad